Suganthini Ratnam / 2011 நவம்பர் 21 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(எஸ்.மாறன்)
	
	நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின்  எண்ணிக்கையில் 50க்கும் குறைவாகவுள்ள 1,600 பாடசாலைகள் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய அபிவிருத்தி செய்யப்பட்டு மாணவர்களை கவரும் பாடசாலைகளாக மாற்றியமைக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.குணசேகர தெரிவித்தார்.
	
	இப்பாடசாலைகளுக்கு பௌதீகவளம், ஆசிரியர்வளம் விசேட கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டு மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அவர் கூறினார். 
	
	இதன் பரீட்சார்த்த செயற்றிட்டம் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பிக்கப்படுமென்பதுடன், இந்த மாகாணத்தில் 260 பாடசாலைகள் 50க்கும் குறைவான  மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளாக காணப்படுவதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
58 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
9 hours ago