2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

50 இளம் ஊடகவியலாளர்களுக்கு ஒருநாள் பயிற்சிப்பட்டறை

Super User   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                     (றிப்தி அலி)

நாடளாவிய ரீதியில் உள்ள 50 இளம் ஊடகவியலாளர்களுக்கு செய்தி அறிக்கையிடல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறையொன்றை  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளது.

இப்பயிற்சிப்பட்டறை ஒக்டோபர் மாத இறுதியில் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.

கடந்த மூன்று வருடத்திற்குள் ஊடகத்துறைக்குள் நுழைந்து பிராந்திய ஊடகவியலாளர்களாக பணி புரியும் இளம் ஊடகவியலாளர்களுக்கு இப்பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

செய்தி அறிக்கையிடல் பயிற்சி பட்டறையில் பங்குபற்ற விரும்பும் பிராந்திய ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனை (தொலைபேசி இலக்கம் 0772612288) தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .