2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மருந்துக் கொள்கையை பின்பற்றாமையால் ரூ.55 பில்லியன் செலவு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

சேனக பிபிலயின் மருந்துப்பொருள் கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறியுள்ளதால் மருந்து பொருட்களை வாங்குவதில் பெருந்தொகையாக 55 பில்லியன் ரூபாவை ஆண்டு தோறும் நாடு செலவிட வேண்டியுள்ளதாக பேராசிரியர் சேனக பிபில ஞாபகார்த்த சங்கம் நேற்று குற்றம் சாட்டியுள்ளது.

2006 மஹிந்த சிந்தனையில் வாக்களிக்கப்பட்ட மருந்தகப்பொருள் கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் மருந்துகள், மருத்துவ கருவிகள் மீது செலவளிக்கப்படும் தொகையில் 70 சதவீதத்தை மீதப்படுத்த முடியும் என்றும்  அவர் கூறினார்.

மருந்துகளுக்கு விலைக்கட்டுப்பாடு இல்லையாதலால் மருந்துகளை ஒரு நியமவிலையில் வாங்க முடியாதுள்ளது என பிபில ஞாபகார்த்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.

நீரிழிவு நோய்க்கு வழங்கப்படும் மெட்போமின் எனும் மருந்தை ஒரு ரூபாவுக்கு வாங்க முடியும் ஆனால் அது கடைகளில் 12 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இது போலவே பல மருந்துகள் அதியுச்ச விலையில் விற்கப்படுகின்றன என பண்டார கூறினார்.

இந்த பிரச்சினையை கவனிக்குமாறு நாம்  சுகாதார அமைச்சிடம் கேட்டிருக்கலாம். ஆனால் மருந்து இறக்கும்பதி கூட்டுறவு மட்டும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் கீழ் வருவதால் தம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இப்படி ஒரு பிரச்சினை இருப்பதுபற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்பதையே நான் சந்தேகிக்கிறேன்' என அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .