Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளதாகவும் 20,336 குடும்பங்களைச் சேர்ந்த 62,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 6,244 பேர் 56 முகாம்களில் தங்கியிருப்பதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
மாத்தறை மற்றும் வெலிமடை பிரதேசங்களிலேயே இருவர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளனர். அத்துடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை மோசமான காலநிலை காரணமாக 188 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 1,237 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 19 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, புத்தளம், கம்பஹா, கண்டி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டோருக்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கம்பஹாவில் 7,533 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 3,330 குடும்பங்களும் புத்தளத்தில் 2,225 குடும்பங்களும் வவுனியாவில் 1,405 குடும்பங்களும் மன்னாரில் 1218 குடும்பங்களும் கிளிநொச்சியில் 1,120 குடும்பங்களும் ஹம்பாந்தோட்டையில் 830 குடும்பங்களும் குருநாகலில் 194 குடும்பங்களும் கண்டியில் 78 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரம்புக்கன- கடுகன்னாவ, பலான - இஹலகோட்டே ரயில்பாதைகளில் கற்பாறைகள் உருண்டு வீழ்ந்துள்ளதால் மலையக ரயில்சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
52 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago