2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

புலிகள் அமைப்பின் 68 முன்னாள் போராளிகள் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுக் கல்லூரி புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த முன்னாள் 68 போராளிகள் இன்று விடுவிக்கப்பட்டு அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் காமினி விஜிதமுனி சொய்ஸா, புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் உள்ளிட்ட பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.அத்துடன், மேற்படி குறித்த இரு அமைச்சினதும் நடமாடும் சேவையும் இங்கு நடைபெற்றது. பெருமளவிலானவர்கள் இதில் கலந்து கொண்டனர். புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ள தமது உறவுகளை விடுவிக்கக்கோரியே பலர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

மேலும், யுத்த காலத்தில் கடும் காயங்களுக்குள்ளான பொதுமக்கள் சிலருக்கு நட்ட ஈட்டுக்குரிய காசோலைகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--