2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியை கொலை செய்ய 7 கோடி கேட்ட பெண்; நீதிமன்றில் பொலிஸார் தகவல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரிடம் ராசலிங்கம் மதனி என்ற பெண் புலிச் சந்தேகநபர் கேட்டுள்ளதாக கேகாலை மேல் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு, கொள்ளுப்பிட்டி, மிஹிந்து மாவத்தையில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஜனாதிபதியை அங்கு வைத்து படுகொலை செய்ய முடியும் என்றும் குறித்த பெண் மேற்படி மூவரிடம் தெரிவித்திருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஜசிங்க கேகாலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி வரையிலான  காலப்பகுதியில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கேகாலை பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்ய முயற்சித்தார் என்று யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த குண்டு மதனி என்று அழைக்கப்படும் ராசலிங்கம் மதனிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை கேகாலை மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்தேகநபர் 'ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு 7 கோடி ரூபா அதிகம் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்லவை படுகொலை செய்வதற்கு 20 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது என்றும் குறித்த சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர மேற்படி வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .