2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

8 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகள் இன்று (14), உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி, இவர்கள் இன்று (14) காலை, 8 மணிமுதல் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கைதிகள், கடந்த யுத்தகாலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் அனைவரும் வடபகுதியைச் சேர்ந்தவர்களென, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X