Suganthini Ratnam / 2010 நவம்பர் 14 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
அரசாங்க வைத்தியசாலைகளில் நாளை திங்கட்கிழமை முதல் வெளிநோயாளர்கள் பிரிவுகள் இரவு 8 மணி வரை திறந்துவைக்கப்படவுள்ளன. 
	
	வெளிநோயாளர்கள் பிரிவுகளை 24 மணித்தியாலமும் திறந்துவைக்கப்படுவதற்கான திட்டத்தின் அரசாங்கத்தின் ஒரு ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகவே நாளை முதல் அவை இரவு 8 மணி வரை திறந்துவைக்கப்படவுள்ளன. 
	
	அரசாங்க வைத்தியசாலைகளிலுள்ள  வெளிநோயாளர்கள் பிரிவுகள் தற்போது மாலை 4 மணி வரை மாத்திரமே இயங்கிவருகின்றன.
சகல மாவட்ட பொது, போதனா வைத்தியசாலைகளும் இந்த விதிக்கு அமைந்து செயற்படும். இதேவேளை, இந்த வைத்தியசாலைகளில் 24 மணிநேர அவசர சிகிச்சைப் பிரிவு சேவை வழமைபோல் தொடருமென சுகாதார அமைச்சினூடாக பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கூறினார். (KB)
1 hours ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
9 hours ago