Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் குறைந்தபட்சம் 800 குற்றவாளிகள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ள நிலையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்க்க அரசாங்கம் விரும்புவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க ரோய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
1976 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் மரண தண்டனைகள் விதிக்கப்படாத நிலையில் 2004 ஆம் ஆண்டு முதல் பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல், கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் அலுகோசு பதவியிலிருந்த இருவரும் பதவி உயர்வுபெற்றுள்ளதால் அலுகோசு பதவி வெற்றிடமாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்பதவியை வெற்றிடமாக வைத்திருக்க முடியாதென்பதால் அடுத்த வாரம் இப்பதவிக்கு விண்ணப்பங்களை கோரவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக குறைந்தபட்சம் 800 பேர் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும் எனவும் திஸாநாயக்க கூறினார்.
26 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
meenavan Thursday, 06 October 2011 05:06 PM
கின்னஸ் சாதனைக்கு போகுமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago