2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

கைகலப்பு: 9 பாகிஸ்தான் அகதிகள் காயம்

George   / 2014 ஒக்டோபர் 22 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

இலங்கையில் தங்கியிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனதின் ஊடாக வெளிநாடுகளுக்கு புகலிடம் கோரியுள்ள பாகிஸ்தானிய பிரஜைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பத்து பேர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பில் தற்காலிகமாக தங்கியுள்ள கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த பாகிஸ்தானிய பிரஜைகளே தாக்கப்பட்டுள்ளதாக  தெரிய வருகிறது. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் கடற்கரையோரத்தில்  இச்சம்பவம் நேற்று மாலை; இடம்பெற்றுள்ளது. கடற்கரையில் கரப்பந்தாட்ட  விளையாட்டின் போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .