2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

HIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 01 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

HIV தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஒன்றாக சிந்திப்போம் - 'மாற்றத்தை ஏற்படுத்துவோம் - எய்ட்ஸை இல்லாது ஒளிப்போம்' என்பதே இந்த சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தின் தொனிப்பொருளாகும்.

எய்ட்ஸ் நோயை 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்பதே சுகாதார அமைச்சின் நோக்கமாகும் என்று தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விசேட வைத்தியர் ஆசிறி ஹேவா மாலகே தெரிவித்துள்ளார்.

தாய் மூலமாக குழந்தைக்கு HIV நோய் ஏற்படுவதை முழுமையாக இல்லாது செய்த நாடாக தற்பொழுது இலங்கை சர்வதேச சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .