2021 மே 08, சனிக்கிழமை

இலங்கை அதிபர் சேவைப் பரீட்சை-III திகதியை மாற்றவும்

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நஹீம் முஹம்மட் புஹாரி

இலங்கை அதிபர் சேவை தரம்-III க்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு தோற்றவுள்ள ஆசிரியர்களில் அதிகளவானோர் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளமையினால், இப்பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்திப் பிறிதொரு தினத்தில் நடத்துமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர்க் கிளையின் இணைச் செயலாளர் ஏ.எம்.றஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு அனுப்பியுள்ள ஞாயிற்றுக்கிழமை (04) அவசரத் தந்தியிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்தந்தியில், 'க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணி எதிர்வரும் 9ஆம் 10ஆம் திகதிகளிலேயே முடிவடையும். இந்நிலையில், அதிபர் சேவை தரம் -III க்கான பரீட்சையும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களில் பெரும்பாலோனோர் விடைத்;தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10ஆம் திகதி இப்பரீட்சை நடைபெறுமாயின், இவர்களால் அதிபர் சேவை பரீட்சைக்கு தோற்றமுடியாமல் போகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X