2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

"இளைஞர்களுக்கான நாளை" அமைப்பினால் புலமைப் பரீட்சை மாணவர்களுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தலைமையில் இயங்கும் "இளைஞர்களுக்கான நாளை" அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்தில் நேற்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை வரை நடைபெற்றது.

இக்கருத்தரங்கை 215ஆவது இராணுவ  பிரிகேற் பொதுத் தொடர்பு அதிகாரி நலிந்த மகாவிதான அடம்பன் இராணுவப் பிரிவு 2ஆம் அதிகாரி மேஜர் சாலங்க ஆரந்தெனிய, மன் /அடம்பன் ம.ம.வி  அதிபர் எம்.கிறிஸ்ரியான் ஆகியோர் இணைந்து மன் /அடம்பன் ம.ம.வித்தியாலயத்தில் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

இதில் மடு வலயத்தை சேர்ந்த 29 பாடசாலைகளிலும் இருந்து 401 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மடு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.அ.பத்திநாதன் குருஸ் இளைஞர்களுக்கான நாளை அமைப்பு வட மாகாண இணைப்பாளர் தேசப்பிரிய ஆகியோர்  கொண்டனர். 

                                                                                                       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .