2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

Super User   / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், 04.12.2010 ஆம் திகதி வெளியான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.

யூ.கே. ரைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஹாடிங், பென் மஸின்ரயர் ஆகியோர் 2010 டிசெம்பர் 01 ஆம் திகதி, லண்டனில் உள்ள டோசெஸ்ட்ரா ஹோட்டலைவிட்டுச் செல்ல ஆயத்தமானபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உதவியாளர் ஒருவர் கீழ் மண்டபத்துக்கு அவசரமாக வந்து அவர்களுடன் பேசினார்.

'ஜனாதிபதி ராஜபக்ஷ உங்களை அவசரமாக பார்க்க விரும்புகிறார். தயவுசெய்து உங்களால் வரமுடியுமா?' என ஜனாதிபதியின் தூதுவர் கேட்டார்.

இரண்டு பத்திரிகையாளர்களுமே அப்போதுதான் ஜனாதிபதியுடனான ஒரு மணிநேர நேர்முகத்தை முடிந்துவிட்டு வந்திருந்தனர். அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர்.

'ரைம்ஸ்' பத்திரிகையை சேர்ந்த இந்த பத்திரிகையாள்ரகள் மேலே போனபோது கொறிடோரில் பொறுமையிழ்ந்த நிலையில் ஜனாதிபதி காத்திருப்பதை கண்டனர். நேர்முகம் அளிக்கும்போது முன்பு காட்டிய நடத்தைக்கு மாறாக இலங்கை ஜனாதிபதி கோபமாகவும் விரக்தியுடனும் காணப்பட்டார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனின் சமூகத் தலைவர் ஜேம்ஸ் கிங்ஸ்ரன், அடுத்தநாள் (டிசெம்பர் 2) நடைபெறவிருந்த தனது உரை இரத்துச் செய்யப்பட்டுவிட்டதாக அப்போதுதான் அறிவித்ததாக பத்திரிகையாளரிடம் ராஜபக்ஷ கூறினார்.

தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஆயத்தப்படுத்துவதாகவும் ஒக்ஸ்போட் யூனியனால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க முடியாதெனவும் காரணம் கூறப்பட்டது. 'இந்த பொடியங்களுக்கு இவர் பயந்துவிட்டார்.' - ஜனாதிபதி சட்டென கூறினார்.

ஒக்ஸ்போர்ட் யூனியன்

ஜனாதிபதியின் மனோநிலை விளங்கிக்கொள்ளப்பட கூடியதே. இலங்கையின் தலைவர், ஒக்ஸ்போர்ட் யூனியனில் பேசுவதற்காக பெருமளவு உதவியாளர்களுடன் பிரித்தானியாவுக்கு வந்திருந்தார். இப்போது யூனியன், மிகக்குறுகிய கால அவகாசத்தில் இதை ஒரு தலைப்பட்சமாக இரத்துசெய்துவிட்டது. தமிழீழ விடுதலை புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த ஒரு மனிதருக்கு நிச்சியமாக இது அரசியல் ரீதியான அவமதிப்பே. இப்போது பிரித்தானியாவில் உள்ள புலிகளின் ஆரதவாளர்கள் ஏற்கெனவே வழங்கப்பட்ட அழைப்பை, ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து மீளப்பெற வைத்ததன் மூலம், பதிலடி கொடுத்துவிட்டனர்.

ஒரு தலைப்பட்சமாக இரத்து செய்யப்பட்டமை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு உண்மையில் அரசியல் ரீதியான சங்கடம்தான். அவர் அண்மைக்காலத்தில் வெற்றிப் பெருமிதத்தில் திளைத்தவர். இவரது உரையை ஒருதலைப்பட்சமாக இரத்துச்செய்த ஒக்ஸ்போர்ட் யூனியனால், இவர் இப்போது இழிந்த இலைக்கஞ்சி குடிக்க வைக்கப்பட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் பேசுவதற்காகவே இவ்வளவு தூரம் வந்த இலங்கையில் பிரபலமான அரசுத் தலைவர் கேவலப்படுத்தப்பட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் அவமானப்படுத்தும் நடத்தைக்கு அப்பால் இது மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை மறுத்த பிரச்சினையாகவும் உள்ளது.

முன்னாள் பிரித்தானிய பிரதம அமைச்சர் ஹரோல்ட் மக்மிலனால் மேற்குலகின் பேச்சு சுதந்திரத்தை காக்கும் கொத்தளம் என வர்ணிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர்,  ஜனாதிபதியின் கருத்து சுதந்திரத்தை மறுத்தமை கசப்பான முரண்நகையாகும்.


அறிக்கை

இந்த கவலை தரும் நிலைமைக்கு இட்டுச்சென்ற நிலைமை யாது?

இது தொடர்பில், ஒக்ஸ்போட் யூனியன் சமூகத்தின் ஊடாக அலுவலர் அலஸ்ரெயர் வோக்கரினால் விளக்க அறிக்கை விடுவிக்கப்பட்டது. அது இவ்வாறு கூறியது:

'இந்த வருடத்தின் முன்பகுதியில் எமது அங்கத்தவர் மத்தியில் உரையாற்ற, அவருக்கு வசதியான திகதியொன்றில் வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒக்ஸ்போட் யூனியன் அழைத்தது. உலகெங்கும் உள்ள பிரபல அரசியல்வாதிகளையும் அரசுத் தலைவர்களையும் அழைக்கும் ஒக்ஸ்போர்ட் யூனியனின் கொள்கைக்கு அமையவே ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

'திரு.ராஜபக்ஷவினால் இந்த அழைப்பு ஏற்கப்பட்டதால், ஜனாதிபதியின் விஜயத்துக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் பற்றி எமது யூனியன், தேம்ஸ்வலி பொலிஸுடனும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடனும் விரிவாக பேசியது. பொலிஸாரினால் அண்மையில் எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட ராஜபக்ஷவின் விஜயம் தொடர்பில் காணப்பட்ட பாதுகாப்பு சம்பந்தமான பயங்கள் காரணமாக, ஜனாதிபதியின் உரை நடைமுறையில் சாத்தியமற்றதென மனவருத்தத்துடன் உணர்ந்து கொண்டு அந்த உரை


  Comments - 0

  • piraba Friday, 24 December 2010 01:58 AM

    நல்ல ஜால்ரா! பெரிய எலும்பு துண்டுக்கு வாய்ப்பு இருக்குது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--