A.P.Mathan / 2012 நவம்பர் 14 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் சபையில் டெசோ தீர்மானங்களைக் கொடுத்து விட்டு வந்த தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினுக்கும், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிற்கும் மிகப்பெரிய பாராட்டுக் கூட்டம் ஒன்றை அவர்கள் சென்னை திரும்பிய அன்றே நடத்தி முடித்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். நவம்பர் 11ஆம் திகதி சென்னை திரும்பிய ஸ்டாலினை தி.மு.க. தலைவர் கருணாநிதியே நேரில் விமானம் நிலையம் சென்று வரவேற்றது, அன்று மாலையே தன் தலைமையிலேயே பாராட்டுக் கூட்டத்தை நடத்தியது எல்லாம் டெசோ மாநாட்டு நிகழ்வுகளை அப்படியே வெளிச்சத்தில் வைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சி. அக்கூட்டத்தில் "ஐ.நா. மன்றம் இலங்கையில் பொதுவாக்கெடுப்புக்கு வழி செய்ய வேண்டும்" என்ற கோரிக்கை முக்கியமாக வைக்கப்பட்டிருந்தாலும், இக்கூட்டத்தின் வேறு முக்கியச் செய்திகளும் தி.மு.க.வினருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .