A.P.Mathan / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
'இலங்கையின் இங்கிலாந்து' என செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுகின்ற இடம்தான் நுவரெலியா. இங்கு ஏப்ரல் என்றால் ரொம்ப விசேடம். இலங்கையின் ஏனைய பாகங்களிலிருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான உல்லாச பயணிகள் நுவரெலியாவில் குவிந்திருப்பர். இந்த ஏப்ரல் பருவகாலத்தில் நுவரெலியாவில் தங்குவதற்கு இடம்தேடுவதென்பது ரொம்ப கஷ்டம்.
இப்படியான அவசர நேரத்தில் கைகொடுக்கக்கூடிய தனிமையான இடம்தான் Renown Residence. இது தனியொரு வீடு. குடும்பமாகச் சென்று இங்கு தங்கக்கூடிய வசதிகள் இருக்கின்றன. நுவரெலியா நகரின் மையத்திலே கிளன் போல் வீதியில் இவ்விடம் அமைந்திருப்பதால் அனைத்துக்கும் வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மூன்று பெரிய அறைகளுடன் வரவேற்பறை, சமையலறை, குளியலறை என அனைத்தும் அம்சமாக அமைந்திருப்பது இங்கு சிறப்பாகும். குடும்பமாகச் செல்பவர்கள் முன்கூட்டியே இவ்விடத்தினை தெரிவுசெய்துகொண்டால் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். இந்த தங்குமிடத்தின் சுற்றுச் சூழல் மிகவும் அழகானது. நுவரெலியாவின் குளிர்மையை இவ்விடத்தில் இருந்துகொண்டே ரசிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் நுவரெலியாவின் அழகினை ரசிப்பதற்குரிய ஏற்பாடுகளையும் இவர்கள் உங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள். அத்தோடு, உங்களுக்கு வேண்டிய உணவுகளையும் நீங்கள் விரும்பியபடியே செய்துகொள்ளக்கூடிய வசதியும் இங்கிருக்கின்றமை மேலும் சிறப்பானதாகும்.
ஏப்ரல் பருவகாலம் நெருங்குகின்ற இத்தருணத்தில் இப்பொழுதே இவ்விடத்தினை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் வசந்தகாலம் வர்ணமயமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை. 0094 523525141 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். Pix: Waruna Wanniarachchi
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .