வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

நாயை விரும்பும் கணவன் வேண்டும்: திரிஷா

 


நடிகை திரிஷா என்றாலே வித்தியாசமானவர் என்ற பார்வை சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகளை திரிஷாவின் விடயத்தில் நாங்கள் எதிர்பார்க்க முடியாது. காரணம், அடிக்கடி தான் சொல்வதையே மாற்றிச் சொல்பவர் நடிகை திரிஷா.

அண்மைக்காலத்தில் திரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தங்கள் நடைபெறவிருக்கின்றன என்ற செய்தி பரவலாக அடிபட்டது. அதற்கு முன்னர், பல தொழிலதிபர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். அதுமட்டுமல்லாமல் தாராள விருந்துகளை வழங்குவதிலிலும் திரிஷா பேர்போன புள்ளி என்ற செய்தியும் இல்லாமல் இல்லை.

பத்தோடு பதினொன்றாக தோன்றும் துணை நடிகை வேடத்தில் நடிக்கத் தொடங்கி, இன்று முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தினை தக்கவைத்திருப்பதென்பது சாதாரண விடயமல்ல. இருந்தபோதிலும் பல இளம் நடிகைகளின் வருகையினால் திரிஷாவின் மார்க்கட்டும் இறங்கித்தான் போயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் திரிஷா தன்னுடைய திருமணம் சம்பந்தமான அறிக்கைகளை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். தனக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்று அறிவித்தால், அதற்கிடையில் படத்தில் எப்படியாவது நடிக்க வைக்கவேண்டும் என பல தயாரிப்பாளர்கள் முண்டியடிப்பர் என்பது திரிஷாவின் தந்திரம். இதனைத்தான் அண்மைக்காலமாக அரங்கேற்றி வருகிறார்.

இப்பொழுது தன்னுடைய திருமணம் பற்றி வேறு ஒரு கருத்தினை முன்வைத்திருக்கிறார். 'நான் மிருகங்களை அதிகம் நேசிப்பவள். என்னுடைய வீட்டில் ஏராளமாக நாய்கள் இருக்கின்றன. இவற்றினை அன்பாக கவனிக்கக்கூடிய ஒருத்தர்தான் எனக்கு கணவராக அமையவேண்டும் என காத்திருக்கிறேன்...' என திரிஷா கூறியிருக்கிறார்.

ஆக, நாய்களுடன் அன்பாக பழகக்கூடிய தொழிலதிபர்கள் திரிஷாவினை கரம்பிடிப்பது பற்றி சிந்திக்கலாம். நம்நாட்டிலும் இத்தகைய தகைமையுடையவர்கள் திரிஷாவிற்கு விண்ணப்பம் அனுப்பிப் பார்க்கலாமே..!!

Comments (8)கருத்து
...
written by GM, December 08, 2011
நாய் குணம் உள்ள மனிதனை தேடுகிறார் போலும்?
...
written by ala, December 08, 2011
ஆஹா இவளல்லவா தமிழ் பெண். மனிதர்கள் எல்லாம் என்ன நாய்களை விட கேவலமாக போய்விட்டார்கள். இதை விட நாய்களை பார்த்து கொள்ள ஒருவர் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாமே. ஆக த்ரிஷாவை கட்டிக்கொள்கிறவர் நாய்களை மட்டும் பார்த்து கொண்டாள் போதும் த்ரிஷாவை கவனிக்கவே தேவை இல்லை?
...
written by mfareeed, December 10, 2011
திரிசா நீங்கள் ஒரு நாயை கல்யாணம் செய்து கொள்ளலாமே...
...
written by SSSSSSSSSSO, December 11, 2011
நீங்க சுருக்கமா என்னை விரும்பும் கணவர் வேண்டும் என்று சொல்றிங்க. அதற்கு நீங்க கைல வைத்து இருப்பதை கல்யாணம் பண்ணினால் நல்லம்.
...
written by aboo, December 12, 2011
இதெல்லாம் புரட்டு
...
written by vinoth, December 12, 2011
well...I'm not a fan of her but good luck with that thrisha...
...
written by ROSHAN HILMEE, December 14, 2011
என்ன நாய்ப்பெண் இவள் ?
...
written by ROSHAN HILMEE, December 14, 2011
மிஸ்டர் அலா திரிஷா தமிழ் பெண் அல்ல, தெலுங்கு ஒ.கே. வா?

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: