2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

அதிக வெப்பம் காரணமாக கனடாவில் 33 பேர் பலி

Editorial   / 2018 ஜூலை 06 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடா, கிவ்பெக் நகரில் நீடித்துவரும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, இதுவரை 33 பேர் பலியாகியுள்ளனர் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி நகரில் 35 பாகை செல்சியஸூக்கும் மேல் வானிலைப் பதிவாகியுள்ளதாக, அந்நாட்டு ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள், 50, 80 வயதுக்கும் உட்பட்டவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவு நீரை அருந்துமாறும் வெயிலில் நடப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அந்நாட்டு மக்களுக்கு, கனடா அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

கனடவாவில், ஒரு தசாப்தத்துக்குப் பிறகு இத்தகைய வானிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .