2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

அனுமதிப்பத்திரம் வழங்கும் காலம் நீடிப்பு

J.A. George   / 2021 மார்ச் 02 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலத்தை நீடிக்க பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மாவட்ட செயலகங்கள் வழங்கிய அனைத்து துப்பாக்கி உரிமங்களையும் புதுப்பிப்பதற்கான காலக்கெடு இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் காலாவதியானது.

இருப்பினும், கொவிட் தொற்றுநோய் காரணமாக இந்த காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த காலம் மே 31 வரை நீட்டிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு அபராதமும் இன்றி அந்த காலகட்டத்தில் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X