Editorial / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 04:00 - 2 - {{hitsCtrl.values.hits}}
2018ஆம் ஆண்டுக்கான பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
கிறீன்கார்ட் லொட்டரி என அழைக்கப்படும், இந்தத் திட்டம் 2017 ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல், 2017 நவம்பர் 7 ஆம் திகதி வரை இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்காகத் திறந்திருக்கும்.
பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சி திட்டம் எழுந்தமான விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட, விண்ணப்பதாரிகள் அமெரிக்க விசாவுக்கு தேர்முகதேர்வுக்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
அவர்கள், அதில் தகுதிபெற்றால் சட்டபூர்வமான நிரந்தரமான அமெரிக்க குடியிருப்பாளர்களாக மாறுவார்கள்.
கருத்தில் கொள்ளவேண்டிய சில பரிந்துரைகள்:
- லொத்தருக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் 2017 ஒக்டோபர் 3 முதல் 2017 நவம்பர் 7 வரை திறந்திருக்கும்.
- தகுதிபெற்ற நாடுகளின் பிரஜைகள் இந்த லொத்தருக்கு விண்ணப்பிக்கலாம். இலங்கையும், மாலைதீவும் தகுதிபெற்றுள்ளன.
- விண்ணப்பதாரிகள் ஒருமுறை மாத்திரமே விண்ணப்பிக்கலாம். பலமுறை விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சி திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையை விண்ணப்பதாரிகள் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் உறுதிசெய்யப்பட்ட இலக்கத்தை விண்ணப்பதாரிகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்களா என ஆராய்வதற்கு அது தேவைப்படும்.
இணைய விண்ணப்பம் என்பது முற்றுமுழுதாக இலவசமானது. மறைமுக கட்டணங்கள் எதுவுமில்லை, மோசடிகள், அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கும் நபர்கள், நிறுவனங்கள் மற்றும் நீங்கள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக தெரிவிப்பவர்கள் குறித்து அவதானமாயிருக்கவும், விண்ணப்பத்தை பூர்த்திசெய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் மூன்றாம் தர்ப்பொன்றின் உதவி அவசியமில்லை.
இந்தத் திட்டம் குறித்து மேலதிகமாக அறிந்துகொள்வதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் https://lk.usembassy.gov/visas/immigrant-visas/diversity-visa/ என்ற இணையத்தளத்துக்கு செல்லவும்:
இதேவேளை, ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் முழுமையான அறிவுறுத்தல்கள் காணப்படுகின்றன. லொத்தருக்கு விண்ணப்பிப்பதற்காக www.dvlottery.state.gov. செல்லவும்.
மே மாதம் 2018 ஆரம்பத்தில் உள்ள நுழைபவர் நிலை பக்கத்துக்குச் சென்று www.dvlottery.state.gov நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்களா என்பதை உறுதிசெய்யமுடியும்.
தெரிவுசெய்யப்பட்டவர்கள் மேலதிக தகவல்களை சமர்ப்பிக்குமாறு கோரப்படுவார்கள், மேலும், அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நுழைபவர் நிலை பக்கத்துக்குச் செல்லும்போது அவர்கள் நேர்முகத்தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்த அறிவித்தலைக் காணலாம்.
நேர்முகத் தேர்வுக்காக, தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க தூதரகத்தின் அதிகாரியொருவரின் நேர்முகத்தேர்வை தெரிவு செய்யப்பட்டவர் எதிர்கொள்ள வேண்டும், அவரே நீங்கள் விசா பெறுவதற்கு தகுதியானவரா என்பதை தீர்மானிப்பார். மருத்துவ மற்றும் பொலிஸாரின் அறிக்கைகளும், அமெரிக்க தூதரகத்தின் விசா கட்டணத்துக்கான கட்டணமும் தேவைப்படும் என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
Puvishan Friday, 24 May 2019 05:25 PM
19 வயதினோர் விண்ணப்பம் செய்யலாமோ
Reply : 0 0
முருகேசு நிவிதா Friday, 04 October 2019 10:10 AM
It's a good idea
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago