Editorial / 2020 ஜனவரி 24 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்களைப் பெற சென்றவர்கள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிறைந்தமையினால் ஏற்பட்ட அமைதியின்மையானது, சமூகமாக்கப்பட்டுள்ளது.
இன்று (24) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்கள், நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்காக வருகை தந்திருந்தனர்.
இதன் போது பிரதேச செயலகத்தில் அதிகளவான மக்களின் வருகையினால் சிறிது அமைதி இன்மை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிஸார் இராணுவத்தினரின் வருகையை தொடர்ந்து சுமூக நிலையை அடைந்தது.
இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப்டிவங்களை சீராக வழங்குவதற்கு, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இன்று மாத்திரம் ஏறத்தாழ 1500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் குறித்த விண்ணப்ப படிவங்களை நாவிதன்வெளி, அன்னமலை சவளக்கடை, சொறிக்கல்முனை, சாளம்பைக்கேணி மத்தியமுகாம் உள்ளிட்ட கிராம சேவக பிரிவில் உள்ள வேலையற்ற விண்ணப்பத்தாரிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
18 minute ago
25 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
25 minute ago
7 hours ago