2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘அரசியல் கைதிகள் இல்லை’

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் நாட்டில் இல்லை” நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். 

நீதியமைச்சில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை என்னவென, ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார். 

அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், 

கைதிகளை பறிமாற்றிக்கொள்வது தொடர்பில், உலகில் பல்வேறான நாடுகளுடன் நீதியமைச்சு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. இன்னும் சில நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தங்களை செய்யும். எனினும், நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்ள நாடுகளில் எல்லாம் கைதிகள் இருக்கின்றனர். எனினும், அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் இல்லை. இலங்கையிலும் இல்லை’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X