Editorial / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாகும் வரையான உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை, சிறப்பான நிலையில் காணப்படுகிறது என, அநுராதபுர போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளனர். அவர்களின் உடல்நிலையைச் சோதித்த பின்னரே, இது அறிவிக்கப்பட்டுள்ளது.தம்மீதான வழக்குகள், வவுனியா நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டெம்பர் 25ஆம் திகதியிலிருந்து, இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்மீதான வழக்குகள், வவுனியா நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டெம்பர் 25ஆம் திகதியிலிருந்து, இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, அவர்களது உடல்நிலை தொடர்பாகக் கவனஞ்செலுத்திய சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலை அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய, மருத்துவ பரிசோதனைகளுக்காக அநுராதபுர வைத்தியசாலைக்கு அனுப்பியிருந்தனர். இதைத் தொடர்ந்து, உடல்ரீதியாக அவர்கள் உடற்றகுதியுடன் இருப்பதாகவும், வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
எனினும், இந்த அறிவிப்புத் தொடர்பாக, வடமாகாண சபை உறுப்பினரும் இப்பிரச்சினையில் அதிக கவனத்தைச் செலுத்திவருபவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தைத் தொடர்ந்துகொண்டு கேட்டபோது, அவர்களின் உடல்நிலை, மோசமான நிலையிலேயே காணப்படுகிறது என்று தெரிவித்தார். அதைத் தன்னால் உறுதியாகக் கூற முடியுமெனவும் குறிப்பிட்டார்.
26 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
2 hours ago