Editorial / 2020 ஏப்ரல் 11 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 20(5) ஆம் பிரிவின் கீழான கட்டளை விதி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அரிசி வகைகளின் கிலோகிராம் ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா - ரூபாய் 90, கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 90, நாட்டரிசி - ரூபாய் 90, பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 85.
நேற்று (10) முதல் இது நடைமுறைக்கு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தல், அதற்காக முன்னிற்றல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல் ஆகியன மேற்கொள்ளப்பட்டால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
17 Jan 2026
17 Jan 2026