2020 மார்ச் 30, திங்கட்கிழமை

ஆசிரியர் இடமாற்றம் இடைநிறுத்தம்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை தவணைக் காலங்களின் போது, ஆசிரியர் இடமாற்றங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தவணைக் காலங்களில் ஆசிரியர் இடமாற்றம் இடம்பெற்றால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் இந்தக் கோரிக்கையை ஆராய்ந்து பார்த்த பின்னரே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

இந்த ஆண்டுக்கான ஆசிரிய இடமாற்றங்களுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் திகதி, பின்னர் அறிவிக்கப்படும் என்றும் எவ்வாறாயினும் ஆசிரியர் இடமாற்ற சபையின் கூட்டம் நிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கான புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், இதன் ஊடாக ஆசிரியர்களுக்கு மிகவும் இலகுவானதும் சீரான முறைமையுடனும் கூடிய வகையில் தனது ஆசிரிய இடமாற்றம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .