வா.கிருஸ்ணா / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில், ஆவாக்குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ஷெல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்தி, ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகள், கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை என்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் துளசி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, உப்போடை லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக செயலாளர் துளசி மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு துறையினரும் சட்டத்துறையினரும் எடுக்கும் நடவடிக்கைகளை எமது கட்சி வரவேற்கின்றது என்று தெரிவித்தார்.
8 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
1 hours ago