2020 மார்ச் 30, திங்கட்கிழமை

இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் மெசினோ நகரில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தமையை உறுதிப்படுத்த முடியவில்லை என ரோமிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

​இ​தேவேளை மெசினோ நகரில் வசித்த 70 வயதான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கையின் வெளி விவகார அமைச்சின்  பேச்சாளரான ருவந்திகா தெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எந்த​வொரு இலங்கையரும் கொ​ரோனா தொற்றுக்கு உள்ளாகி, உியிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் சரியான தகவல்களை வெளிப்படுத்துமாறு அந்நாட்டு ஊடகங்களுக்கு அறிவிக்குமாறு, ரோமிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்துக்கு அறிவித்துள்ளதாக  அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .