Editorial / 2018 மார்ச் 05 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை, மேற்கத்திய மருத்துவத்தில் இதுவரையிலும் கண்டுப்பிடிக்கப்பட வில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
“மேற்கத்திய மருத்துவ முறைமையின் பிரகாரம், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரேயொரு முறைமை, சத்திரசிகிச்சை முறைமையாகும்” என்றும் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.
இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை தொடர்பில் சமூகத்தில் வெகுவாகப் பேசப்படுகின்றது. இந்நிலையிலேயே, அவர் விடுத்திருந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அம்பாறையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, இனப்பெருக்கத் தடை மாத்திரை தொடர்பில், சுகாதார அமைச்சிடம் விசாரிக்கின்றனர். மனிதன் தொடர்பில் தேடிப் பார்க்கின்ற வேளையில், வைத்திய விஞ்ஞான ரீதியில், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது, நிரந்தரமாக இல்லாமற் செய்வதாகும்.
சிலருக்கு, இனப்பெருக்கத்துக்கான இயலுமையானது இயற்கையாகவே, இல்லாமற்போய்விடக் கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன. மற்றையது குடும்பமாகிய நபரொருவர், தன்னுடைய குடும்பத்தை எதிர்காலத்தில் பெருக்கிக் கொள்ளவேண்டிய தேவையில்லையெனக் கருதி, கர்ப்பம் தரிப்பதை இல்லாமற் செய்துகொள்வதற்கான நிரந்தர முறைமையாகும்.
இரண்டாவது முறைமைக்காக, இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கோரிக்கை விடுக்கலாம். அதற்கான சேவையை குடும்பத் திட்டமிடல் சேவை அமைப்பு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கத்திய முறைமையின் கீழ் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போது இரண்டு முறைமைகள் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் பெண்களுக்கு எல்.ஆர்.டி சத்திரசிகிச்சை முறைமையும், ஆண்களுக்கு வாசெத்தி சத்திரசிகிச்சை முறைமையும் உள்ளது.
இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, மேற்கத்திய முறைமையில் இன்றுவரையிலும் ஒளடத முறைமையொன்று இல்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 minute ago
36 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
3 hours ago
4 hours ago