J.A. George / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள் நேற்று பதிவாகியதுடன், நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார்.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 20 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்தார்.
மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொழும்பு 13 ஐ சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.
39 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
39 minute ago
1 hours ago