Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொவிட் – 19 நெருக்கடி நிலையில், 10 தொன் உயிர்க்காக்கும் அத்தியாவசியமான மருந்துத் தொகுதியை இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்தத் தொகுதி மருந்துப்பொருள்கள் ஏயார் இந்தியா விசேட விமானம் ஒன்றின் மூலமாக இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இது தொடர்பாக, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,
“ எவ்வாறான சூழ்நிலையிலும் இலங்கைக்கான ஆதரவில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை காண்பிக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக இது அமைகிறது. உள்நாட்டில் காணப்படும் சவால்கள், கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தனது நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் தமது வளங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதில் இந்தியா மிகவும் உறுதியாகவுள்ளது.

3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago