Editorial / 2020 ஜூலை 29 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் (31) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
முதலாவது விமானப் பயணம் நாளை மறுதினமும் இரண்டாவது விமானப் பயணம் எதிர்வரும் முதலாம் திகதியும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, முதற்கட்டமாக டுபாயில் இருந்து இலங்கையர் சிலர் நாளை மறுதினம் நாடு திரும்பவுள்ளனர்.
இவ்விரு பயணங்களிலும் 550 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
8 minute ago
39 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
39 minute ago
51 minute ago