2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

இலங்கையில் உணவுக்கு சிக்கல்? ஐ.நா எச்சரிக்கை

Yuganthini   / 2017 ஜூன் 26 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுமையான வரட்சி மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அதிக மழைவீழச்சியினால், இந்நாட்டின் வயல்நிலங்கள் பல அழிவடைந்துள்ளன. இதனால், இலங்கையில் 9 இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள், உணவுப் பாதுகாப்புத் தொடர்பான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியன வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இவ்வாண்டின் நெல் அறுவடை, 2.7 மில்லியன் தொன்களாக மாத்திரமே காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.

இது, கடந்த வருட அறுவடையுடன் ஒப்பிடப்படுமிடத்து, 40 சதவீத வீழ்ச்சியாகும் எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், உணவுப் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்வதற்காக, விவசாயிகளுக்கு உதவுவது அத்தியாவசியமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள், அதற்கான விதைகள் மற்றும் விவசாய உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதும் அவசியம் எனவும் கூறியுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, “இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்பட்ட விவசாய உற்பத்திகளின் அழிவுகள் தொடர்பிலான அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்கு, விசேட செயற்படையொன்று நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .