2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

இலங்கையில் எண்ணெய் ஆராய்ச்சியில் ஈடுபட உக்ரேய்ன் அரசாங்கம் இணக்கம்

Super User   / 2010 ஜூன் 30 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் காணப்படும் எண்ணெய் வளம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு உக்ரேய்ன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம், இரு நாட்டு ஜனாதிபதிகளினால் எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று உக்ரேய்னுக்கு பயணமாகியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி விக்டர் யனுகோவிஸ்க்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பினை அடுத்து குறித்த எண்ணெய் ஆராய்ச்சி விவகாரம் தொடர்பான ஒப்பந்தமொன்றும் இரு நாட்டு ஜனாதிபதிகளினால் கைச்சாத்திடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  கியூ நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, குறித்த எண்ணெய் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு உக்ரேய்ன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமையினை உறுதி செய்தார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த உக்ரேய்ன் ஜனாதிபதி விக்டர், இலங்கையில் எண்ணெய் ஆராய்ச்சியில் ஈடுபடுவது குறித்தும் அதற்கான பங்களிப்புக்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவது குறித்தும் தாம் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X