2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

இளவாலை அருட்தந்தை கைது

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 28 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.50 மணியளவில் கைதுசெய்யப்பட்டார்.

இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   இவர் யாழ்ப்பாணம் சிறிய குருமட அதிபராவார்.

யாழ்ப்பாணம், ஆயர் இல்லத்துக்கு முன்பாக தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குத் தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .