Editorial / 2018 நவம்பர் 19 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்காகப் பேரம் பேசுவதற்குத் தனக்கு நேரமில்லையென தெரிவித்துள்ள, மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோசித்த ராஜபக்ஷ, தன்னை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாமென்றும் கோரியுள்ளார்.
றக்பி போட்டிகளுக்காக, தான் மிகவும் வேலைப்பளுவுடன் இருப்பதால், பேரம் பேச தனக்கு நேரமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யோசித்த ராஜபக்ஷவே, அதனை முன்னின்று செயற்படுத்துகின்றார் என, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டை மறுத்த யோசித்த ராஜபக்ஷ, அதற்கு தனது டுவிட்டர் கணக்கில் இட்டுள்ள பதில் டுவிட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .