Editorial / 2019 நவம்பர் 08 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் முறுகல் நிலை, தனிப்பட்ட ரீதியிலானது என்றும் தனக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை என, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தமிழ்மிரருக்கு இன்று (08) தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, அமைச்சர்களான மனோ கணேசன், மற்றும் ரிஷாட் பதியூதின் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் கேட்டபோது அமைச்சர் ரிஷாட் பதியூதின் இதனை தெரிவித்ததுடன், தமது தரப்பினருக்கும் அமைச்சர் மனோவின் தரப்பினருக்கும் எந்தவித முறுகல் நிலையும் இல்லை என்று கூறினார்.
ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த முறுகல் இடம்பெற்றிருக்கலாம் என்றும், தான் அமைச்சர் மனோ உள்ளிட்டவர்களுடன் தொடர்ந்தும் சுமூகமாக பணியாற்றுவதாகவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை நோக்கியே அனைவரும் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025