2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஐ.தே.கவின் மறுசீரமைப்பு அறிக்கை நாளை ரணில் விக்கிரமசிங்ஹவிடம் கையளிப்பு

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு அறிக்கை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவிடம் நாளை கையளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுக் கூட்டம் இன்று நடைபெறவிருப்பதாக மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

இன்று நடைபெறும் கூட்டத்தின்போது, மறுசீரமைப்பு யோசனைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவிருப்பதுடன், அறிக்கை தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினர்.

இந்நிலையிலேயே, குறித்த அறிக்கை நாளை ரணில் விக்கிரமசிங்ஹவிடம் கையளிக்கப்படவுள்ளது எனக் கூறிய அவர், இந்த அறிக்கையில் பல்வேறு புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X