Editorial / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் அதன் செயற்பாடுகளையும் தொடர்ந்து மதிக்கவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் செயன்முறைகள் தொழிற்படும் முறைமைகள் என்பவற்றுடன் இணைந்து வேலை செய்யுமெனவும் அரசாங்கம் கூறுகிறது.
கொழும்பில் உள்ள ஐ.நா வளாகத்தில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 72ஆவது தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.நாவுடனான இலங்கையின் தொடர்பு அப்போது இருந்ததைவிடவும் தற்போது சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
“ஐக்கிய நாடுகள் இரண்டு கொடிய யுத்தங்களைத் தொடர்ந்து அங்கத்துவ நாடுகளில் உருவாக்கப்பட்டது. 1945 ஒக்டோபர் 24இல் செயற்பாட்டுக்கு வந்த ஐ.நா சாசனத்தில், வருங்கால சமுதாயத்துக்கு யுத்தத்தின் கெடுதியிலிருந்து பாதுகாப்பு, பேச்சுவார்த்தை, இராஜதந்திரம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை மதித்து நடக்கும் முறைமை என்பவை உறுதிசெய்யப்பட்டுள்ளன” என அவர் கூறினார்.
“தன்னை தானே தனியனாக்கிக் கொண்டிருந்த நிலையை மாற்றி இலங்கை மக்கள் மீண்டும் தமது தலைவிதியை தாமே கையில் எடுத்து 2015 ஜனவரி 8அன்று ஜனநாயக வழியில் ஒரு துணிச்சலான காரியத்தை நிறைவேற்றினர். இதன்மூலம் சர்வதேச அரங்கில் மீண்டும் தமது மதிப்பை நிலைநாட்டினர்.
“பழைய மோதல் கொள்கைகளை கைவிட்டு, எமது மக்களுக்காக நம்பிக்கையுடன் பொறுப்புகளை ஏற்று ஐ.நா சாசனத்தில்கூறப்பட்டுள்ள விழுமியங்கள், கொள்கைகளை கடைப்பிடிக்க மீண்டும் ஐக்கிய நாடுகள் 70 ஆண்டுகளைக் கடந்து 09 மாதங்களின் பின்னர் மீண்டும் உறுதி பூண்டுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஐ.நா, மக்களை வறுமையிலிருந்து மீட்க உதவியுள்ளது. இது ஜனநாயகத்தை மேன்மைபடுத்தியது நலிவுற்றோருக்கு இந்த உலகை பாதுகாப்பானதாக்கியுள்ளது. ஆயினும் நாம் இன்னும் பாதுகாப்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றோம் அவை.
“காலநிலை மாற்ற விளைவுகள், யுத்தங்கள், மோதல்கள், அகதிகள், வன்முறை அதிகரிப்பு, சகிப்புத்தன்மை இன்மை, மனித உரிமை மீறல்,பயங்கரவாதம் என உள்ளன. இவை மனிதனால் ஆக்கப்பட்டவையே.
“இருப்பினும் இவை பெரும் சவால்களே. இது கடினமானதாக இருப்பினும் ஐநாவின் விழுமியங்களை முன்னெடுத்து செல்வதே இதற்கான தீர்வாகும். பன்மைத்துவம், மனித உரிமைகள், வித்தியாசங்களை மதித்தல், கூட்டிச்செயற்படல் என்ற வழிகளில் இந்த பிரச்சினைகளை நாம் தாண்ட முடியும். “எப்படியாயினும் நாம் இறுதியாக மனித குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற விழிப்புணர்வையும் ஐ.நா உருவாக்க வேண்டும். நாம் எல்லோரும் இன்றைய எமது நலனுக்காக செயற்பட வேண்டும் என்ற உணர்வையும் ஐநா மனிதரிடத்தில் தூண்டிவிட வேண்டும்” என அவர் கூறினார்.
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago