2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஒரு ஆண்டு சிறை; நீதிமன்றம் ஓடிய நடிகர் சரத்குமார், ராதிகா!

J.A. George   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசோலை மோசடி மற்றும் கடன் சம்பந்தமாக ரேடியன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா பங்குதாரராக உள்ள நிறுவனம் தயாரித்த 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்திற்காக, 'ரேடியன்ஸ்' என்ற நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

மேலும், சொத்துக்களை அடமானம் வைத்து ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 

நடிகர் சரத்குமார், ராதிகா வாங்கிய கடனுக்கு அளித்த செக் மற்றும் அடமானம் வைத்த சொத்துக்கள் முறையாக இல்லை என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எம்எல்ஏ., எம்பி.,க்கள் வழக்குகளை விசாரணை செய்யும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 'ரேடியன்ஸ்' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள், 'நடிகர் சரத்குமார், ராதிகா ஓராண்டு சிறை தண்டனை விதித்து' உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தங்களுடைய சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X