2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

கொட்டகலையில் மண்மேடு சரிந்தது

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கணேசன்)  

கொட்டகலை, பத்தனை நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதமடைந்துள்ளது.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலையால் பெய்த கடும் மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வீடுகள், தொழிற்சங்க அலுவலகத்துக்கு பின்புறத்திலிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், இரு வீடுகளில் இருந்த எட்டு பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். 

மேலும், மண்சரிவை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X