2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி- பூவெலிகட, சங்கமித்த மாவத்தையில் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி உடைந்து விழுந்த கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, தேசிய கட்டட ஆய்வு நிலையம், கண்டி மாநகர சபை என்பன இணைந்து இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

இந்த இடிபாடுகளை அகற்றுவதற்காக, 2.8 மில்லியன் ரூபாய் செலவாவதாகவும் குறித்த நிதியை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு செலவிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர், அந்த நிதியை கட்டட உரிமையாளரிடமிருந்து பெற தீர்மானித்துள்ளதாக ​அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடிபாடுகளை அகற்றுவதற்காக 2 வாரங்கள் செல்லுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .