2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கடும் எச்சரிக்கையுடன் சிவாஜிக்கு பிணை

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும்  தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவு கூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை மன்று கடுமையாக எச்சரித்து ஆள் பிணையில் விடுவித்துள்ளது. 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் நினைவேந்தல் நிகழ்வை செய்திருந்தார். 

அதனை அறிந்த கோப்பாய் பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சிவாஜிலிங்கத்தை கைது செய்தனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து  நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, மன்று சிவாஜிலிங்கத்தை எச்சரித்து 2 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்து , வழக்கினை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--