2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கண்டியில் போலி மருத்துவர் சிக்கினார்

S. Shivany   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பிரதேசத்தில் சட்டவிரோதமானமுறையில் இயங்கிவந்த மருந்துவ நிலையம் ஒன்றை பொலிஸார் நேற்று(22) முற்றுகையிட்டுள்ளதுடன், அங்கு கடமையாற்றிய போலி பெண் மருத்துவரையும் கைதுசெய்துள்ளனர்.

கண்டி போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி, போலியான பதிவு இலக்கத்தைக் கொண்டு மேற்படி மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இப்பெண், நீர்கொழும்பு மற்றும் மினுவன்கொட பிரதேசங்களிலும் மருத்துவ நிலையங்களை நடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது பதிவு இலக்கத்தில் மற்றொருவர் மருத்துவ நிலையம் நடத்தி வருவதாக, வைத்தியர் ஒருவர் கண்டி பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டையடுத்தே, சந்தேக நபரான குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 
 

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .