R.Maheshwary / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மத்திய சந்தை தொகுதயிலுள்ள மீன் விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக மூடி வைக்க கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பேலியகொட உள்ளிட்ட பல இடங்களிலிருந்து கண்டி சந்தைக்கு மீன் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதால், தொற்று பரவ வாய்ப்புள்ளதை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி நகர ஆணையாளர் அமில நவரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சந்தைத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பிசிஆர் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பரிசோதனையின் முடிவுகளுக்கமைய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, அவர் தெரிவித்துள்ளார்.
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .