2026 ஜனவரி 14, புதன்கிழமை

’குருகெதர’ புதிய கல்வி அலைவரிசை ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அனைத்துப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், “குரு கெதர”  என்ற புதிய தொலைக்காட்சி அலைவரிசை, இன்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தின் ஊடகப் பங்களிப்புடன், நேற்று முதல்  கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களும் இணைந்துகொள்ள முடியும்.

இதன்படி, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கற்றல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியும். நாளை (21) முதல் முற்பகல் 4 மணி வரை, கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

இதன் பிரகாரம், உயர்தர கலைப் பிரிவுக்காத் தமிழ், சிங்களம், அரசியல் விஞ்ஞானம், புவியியல் ஆகிய விடயதானங்களும் வணிக பிரிவுக்காகப் பொருளாதார விஞ்ஞானம், வணிக கல்வி, கணக்கியல் ஆகிய பாடங்களும் கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளுக்கான பாடங்களும் கற்பிக்கப்படும்.

அத்துடன், சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ், சிங்களம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். அனைத்துப் பாடங்களும், தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமாக கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மேலும், இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் நிபுணத்துவத்துவம் வாய்ந்தவர்களின் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .