2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 22 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பி.சி.ஆர். பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு நேற்று   பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி,  திருவையாறுப் பகுதியில் ஒருவர் மரணமடைந்த நிலையில், இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில் இருந்து வருகை தந்திருந்த நபரின் மகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, கண்டாவளைப் பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து, தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை,  வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப் படையைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏனைய 256 பேருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .