2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

கொலை சந்தேகநபரை திருப்பியனுப்ப கனடா நடவடிக்கை

Yuganthini   / 2017 ஜூன் 11 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலை வழக்கின் சந்தேக நபரான இலங்கையர் மீதான வழக்கு, கனடாவின் சட்டத்தின்படி உரிய காலத்துக்குள் முடிவடையாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இலங்கையரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கனேடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிவலோகநாதன் தனபாலசிங்கம் எனும் இலங்கையருக்கு தேவையான பயண ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என, கனேடிய குடிவரவு அதிகாரி ஒருவர் கூறினார்.

31 வயதான தனபாலசிங்கம், தனக்கு இலங்கையில் ஆபத்து எதுவும் இல்லையெனவும், தான் அகதியாக இருக்க விரும்பவில்லை எனவும் குடிவரவு மற்றும் அகதி சபை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

2012ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்தார் என, தனபாலசிங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வழக்கு, கால எல்லையையும் கடந்து சென்ற நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X