Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு, நிராகரிக்கப்பட்டுள்ளது.
மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாக இந்த மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
அதில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை இல்லை என தெரிவித்து இந்த மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த மேன்முறையீட்டு மனு நீதியரசர்களான சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி தெல்தெனிய ஆகியோர் முன்னைலையில் இன்று (11) விசாரணைக்கு வந்தது.
இதன்போது, குறித்த மனு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மை இணக்கத்துடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு போதுமான சட்டக் காரணிகள் இல்லை எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
11 minute ago
5 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
5 hours ago
07 Jan 2026