2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கோட்டாவுக்கான அழைப்பாணை தள்ளுப்படி

Editorial   / 2020 நவம்பர் 24 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால்  விடுத்த அழைப்பாணை மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுப்படி செய்யப்பட்டது

இரண்டு மனித உரிமை செயற்பாட்டளர்களான லலித், குகன் ஆகிய இருவரும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இவ் அழைப்பாணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 2019ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

குறித்த இருவரும் 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் போயிருந்தனர்.

சர்வதேச மனித உரிமை தினத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே, லலித் மற்றும் குகன் காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .