Kanagaraj / 2016 ஜூலை 17 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
மஸ்கெலியா, சப்த கன்னியா மலைக்கு சென்றிருந்த களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர், அம்மலையிலிருந்து கீழிறங்காது வழித்தவறிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வாறு வழித்தவறியோரில், வெளிநாட்டு மாணவர்கள் இருவர் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
அவ்விருவரும் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்தவர்கள் என்று அறியமுடிகின்றது. அதிலொருவர் பெண் என்றும் அறியமுடிகின்றது.
காணாமல் போனதாகக் கூறப்படும் இந்த ஐந்து மாணவர்களையும் தேடும் நடவடிக்கைகளில், இராணுவத்தினரும் விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஐவரும், நேற்றுச் சனிக்கிழமை மாலைவரையே அம்மலையில் தங்கியிருப்பதற்குச் சென்றதாகவும், கடும் மழைக்காரணமாக மலையிலிருந்து கீழே இறங்கமுடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
வழித்தவறிய மாணவர்களில் ஒருவரின் அலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியை வைத்துக்கொண்டே அவர்களை தேடும் நடவடிக்கைகளில், படையினர் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, அந்த ஐவரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30க்கு மீட்டு, மலைக்கு கீழே கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .